154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜப்பானின் நிலநடுக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக வீடுக்ள மற்றும் கட்டிடங்கள் குலுங்கியமையினால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தஞ்சம் புகுந்துள்ளனர்.
டோக்கியோவில் இருந்து வடகிழக்கில் 244 கி.மீ. தூரத்தில் பூமிக்கு அடியில் 11 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 5.5. ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள், பாதிப்புகள், உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Spread the love