குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
தமது ஆட்சிக் காலத்தில் பாத யாத்திரைகளுக்கு தடை விதிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முடிந்தளவு அமைதியான முறையில் பாத யாத்திரை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது ஆட்சிக் காலத்தில் இவ்வாறு தடை உத்தரவுகளை பெற்;றுக் கொண்டு பாத யாத்திரைகளை நிறுத்த முயற்சிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக எட்கா உடன்படிக்கை, பட்டதாரிகளின் தொழிலில்லா பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு தீர்வு வழங்குமாறு கோரியே போராட்டம் நடத்தப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களை நெருக்கடிக்குள் உள்ளாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்தே போராட்டம் நடத்தப்படுகின்றது எனவும் அரசாங்கம் இந்த செய்தியை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்தாலும் பரவாயில்லை மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரையும் இழிவுபடுத்தும் ஓர் காலமாக தற்காலம் மாறியுள்ளது எனவும் அரசியல்வாதிகள் மட்டுமன்றி விளையாட்டு வீரர்களான முரளீதரன் போன்றவர்களும் விமர்சனம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.