Home இலங்கைஉதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள்

உதவிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்குங்கள்

யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில்

by admin

 

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான கந்துரையாடலானது மாவட்டச்  செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர்,

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு  உதவி வழங்க முன்வரும் தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதற்காக பிரதேச செயலகத்தில் பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவர் பொறுப்பில்  உதவிப் பொருட்கள் உரிய நபருக்கு உரிய நேரத்தில் வழக்கப்படடும் என்பதனை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்வதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலகத்திலும் இதற்கான தனி அலகு உருவாக்கப்பட்டுள்ளது. உணவு அல்லது உணவு அல்லாத பொருட்களை வழங்க முடியும். அதனை, மாவட்டச் செயலகத்தில் பிரதம கணக்காளர் பொறுப்பாகவிருந்து வழங்கப்பட்ட உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மையுடன் உரிய உதவிப் பொருட்கள் பிரதேச செயலகங்களாலும், மாவட்டச் செயலகத்தாலும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  (காணி), மாவட்ட  திட்டமிடல் பணிப்பாளர்,  பிரதம கணக்காளர்,    உதவி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

யாழில் 634 பேர் இடைத்தங்கல் முகாமில் 

யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 634 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More