இந்தியா

போலி என்கவுன்ட்டரில் 1528 பேர் சுட்டுக்கொலை: ராணுவ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி:-

போலி என்கவுன்ட்டரில் 1528 பேர் சுட்டுக்கொலை: ராணுவ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி:-

 

மணிப்பூர் மாநிலத்தில் போலி என்கவுன்ட்டரில் 1528 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட் இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகளின் துறைரீதியான விசாரணைக்கும் அனுமதி அளித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவம் மற்றும் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இதுதொடர்பான வழக்கு ஒன்றில் இன்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், அதிகபட்சமான மற்றும் தேவையற்ற ஆயுத பலத்தை மக்களின் மீது ராணுவத்தினர் பயன்படுத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், போலி என்கவுன்ட்டரில் 1528 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் துறைரீதியாக விசாரித்து விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply