138
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு ஊடகவியலாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் கண்டியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையில் ஊடகவியலாளர்களை விமர்சனம் செய்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊடகங்களை விமர்சனம் செய்வதற்கு பிரதமருக்கு உரிமையுண்டு என்ற போதிலும் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முடியாது என அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Spread the love