சிரியா அலப்போ நகரின் முக்கிய இடமொன்றை கைப்பற்றியதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினருக்கும் சிரிய அரப படையினருக்கும் இடையில் நீண்ட காலமாக போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அலேப்போவின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதில் இரு தரப்பிற்கும் இடையில் கடும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அலப்போவில் அமைந்துள்ள அரசாங்கப் படையினரின் பீரங்கி முகாமை கைப்பற்றியதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
எனினும் இந்தக்கூற்றை சிரிய அரசாங்கப்படையினர் நிராகரித்துள்ளனர்.
படை முகாம் கைப்பற்றப்படவில்லை எனவும் பதில் தாக்குதல்களில் எதிரிகள் பலத்த உயிர்ச் சேதத்தை சந்தித்துள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
அலப்போவில் சுமார் 250,000 பொதுமக்கள் சிக்கியுள்ளதுடன் அவர்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அலப்போவின் முக்கிய இடமொன்றை கைப்பற்றியதாக சிரிய கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு:
224
Spread the love
previous post

