சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 200 பேரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மற்றும் இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 104 பேரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடத்தக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது ஆர்பாட்டக்காரர்கள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவ பொம்மையை எரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை மேலும் முன்னேற விடாமல் தடுத்து நிறுத்திய பொலிசார், 200 பேரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
சென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட 200 பேர் கைது!
32
Spread the love