அமெரிக்காவுடனான இராணுவ தொடர்புகள் ஆபத்தானது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் இலங்கை இராணுவ உறவுகளை வலுப்படுத்தி வருவது இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையையே உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் தொடர்ந்தும் இவ்வாறு இராணுவ உறவுகள் பேணப்பட்டால் இலங்கையும் பிலிப்பைன்ஸைப் போன்று அமெரிக்காவின் கைப்பொம்மையாக மாறி விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் அமெரிக்கா படை முகாம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையிலான நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடனான இராணுவ தொடர்புகள் ஆபத்தானது – திஸ்ஸ விதாரண: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
26
Spread the love