பல கொடி ரூபா கறுப்புப் பணம் அரசுடமையாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு பணம் சம்பாதிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்களை வெளியிட முடியாத ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பணம் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இது தொடர்பிலான உத்தரவினை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் விசாரணை நடத்தப்பட்டு வரும் 300க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளில் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுடன் தொடர்புடைய நபர்கள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள் என்பது பற்றிய விபரங்களை வெளியிட முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.
நபர் ஒருவர் பணம் சம்பாதித்த வழிமுறையை வெளிப்படுத்த முடியாவிட்டால் அந்தப் பணம் நிதிச் சலவை சட்டத்தின் அடிப்படையில் அரசுடமையாக்கப்படும்.
கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரின் சொத்துக்கள் இவ்வாறு அரசுடமையாக்கப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.