179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
செல்பீ எடுத்த சீனப் பெண் ஒருவர் ரயில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அம்பலாங்கொடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
25 வயதான சீனப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ரயில் மிதி பலகையில் இருந்து கொண்டு செல்பீ எடுத்த போது குறித்த சீனப் பெண் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
சீனப் பெண் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love