179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையில் இன மத பேதங்கள் கிடையாது எனவும் தற்போதைய அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் கண்டி மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்து சபாநாயகர், மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் கிரமமான ஓர் திட்டமொன்றை வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள மல்வத்து பீடாதிபதி அண்மையில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூறிய கருத்துக்கள் தொடர்பிலும் சுவிஸ் சபாநாயகரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
Spread the love