Home இலங்கைஜனாதிபதியின் புதல்வர் உள்ளிட்டவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிமீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதியின் புதல்வர் உள்ளிட்டவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிமீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்டவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதி மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் கேளிக்கை விடுதியின் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தஹாம் சிறிசேன உள்ளிட்ட குழுவினர் அதிகாலை 2.00 மணியளவில் இரவு நேர கேளிக்கை விடுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ள  போது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் மீளவும் வந்த தஹாம் சிறிசேன தலைமையிலான தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவம் குறித்த சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகள் சில ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More