168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோவிற்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு வார காலம் வெளிநாட்டில் தங்கியிருப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அனுமதி வழங்கியுள்ளார். கட்டாரில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அவன்ட் கார்ட் மற்றும் ரக்னா லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக பாலித பெர்னாண்டோவின் கடவுச்சீட்டு தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love