150
பாகிஸ்தான் கால்பந்து அணியின் பிரபல நட்சத்திரமான ஷாலைலா பலோச் (Shahlyla Ahmadzai Baluch ) கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவர் கராச்சியில் சென்று கொண்டிருந்த வேளை கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம் வீதியோரம் இருந்த இரும்பு கம்பம் மீது மோதியதில் ஷாலைலா பலோச் மரணம் அடைந்தார்.
வாகனத்தை செலுத்திய சாரதி லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். 20 வயதான பலோச், 2014-ம் ஆண்டு நடந்த தெற்காசிய கால்பந்து போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love