குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கூட்டு எதிர்க்கட்சியின் புதிய கூட்டமைப்பு இந்த ஆண்டில் நிறுவப்படாது என அதன் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அரசியல் முன்னணி அமைப்பது தொடர்பில் பல முக்கிய பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் எனினும் இந்த ஆண்டு இறுதி வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளை அவதானித்து அதன் பின்னர் தீர்மானம் எடுக்க கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மெய்யாகவே அழைக்கின்றாரா அல்லது ஓர் நாடகமா என ஆராய்ந்து அதன் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மஹிந்த தலைமையில் புதிய அரசியல் கட்சியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.