136
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. 346 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு தனது 2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணியானது, நேற்றைய ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட்டுக்களை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முன்னதாக இந்தப் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸ்களில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் – முறையே 579 மற்றும் 357 ஓட்டங்களைப் பெற்றிருந்தன. தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தேவேந்திர பிஸ்சுவின் பந்துவீச்சினை சமாளிக்கத் திணறி, 123 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தேவேந்திர பிஸ்சு – 49 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
Spread the love