குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினத்தன்று, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு , நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபிக்கு மலர் மாலை அனுவித்து நிமலராஜனின் நினைவு தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப் பட்டது.
அதனை தொடர்ந்து யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில், அளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதமின்றிய விசாரணை வேண்டும். ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல், வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்தல் வேண்டும். ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
draft-appoinment-letter-and-resolution
Add Comment