138
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஊழல் மோசடிகள் தொடர்பான பொறுப்பினை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் தீர்மானங்களையும் உத்தரவுகளையும் நிறைவேற்றிய அதிகாரிகள் தண்டிக்கப்படக் கூடாது என தெரிவித்துள்ள அவர் அரசியல்வாதிகளின் பணிப்புரைகளை அமுல்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகள் எடுக்கும் தீர்மானங்களை அமுல்படுத்த வேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love