Home இலங்கைஓர் மனிதபிமானமற்ற செயல் – யாசகர் ஒருவரை நீர் ஊற்றி துரத்தும் காட்சி

ஓர் மனிதபிமானமற்ற செயல் – யாசகர் ஒருவரை நீர் ஊற்றி துரத்தும் காட்சி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்
யாழ்.கஸ்தூரியார் வீதியில் உள்ள உணவகம் முன்பாக யாசகர் ஒருவரை உணவகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் நீர் ஊற்றி துரத்தும் காணொளி காட்சிகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த கடை முன்பாக யாசகம் பெற்ற வயோதிபரை கடையில் வேலை செய்யும் நபர் அப்புறப்படுத்தும் நோக்குடன், நீரினை அவர் மீது ஊற்றி அவரை கடையின் முன்பாக இருந்து அப்புறப்படுத்தி உள்ளார்.

இந்த காட்சி காணொளியாக பதியப்பட்டு இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றார்கள்.

hhh

dfddd

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More