90
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
எதியோப்பியாவில் 1600 பேர் அவசரகால சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். எதியோப்பியாவின் ஒரோமியா மற்றும் அம்ஹாரா ஆகிய நகரங்களில் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை தலைநகரில் போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் எதியோப்பியாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஆறு மாதங்களுக்கு அவசரகாலச்சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Spread the love