103
ஜப்பானின் மேற்கு பகுதியை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 அலகுகளாக பதிவானதாகவும் இதனால் வீடுகள் இடிந்து விழுந்துள்ளதனால் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவ்வழியாக செல்லும் புல்லட் புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love