இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதி தனது ஆட்சிக் காலத்தில் நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும்! இரா.சம்பந்தன்

sambantharகுளோபல் தமிழ் செய்தியாளர்

ஜனா­தி­பதி தனது ஆட்­சிக்­கா­லத்­துக்குள் இந்த நாட்டில் நிலை­யான ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­த­வேண்டும் என்று எதிர்க்கட்­சித்­த­லைவர் இரா சம்­பந்தன் தெரிவித்துள்ளார்.   அத்துடன் நாட்டில் ஜன­நா­யகம் நிலை­பெற வேண்­டு­மாயின் மாகாணம்,பிராந்­தியம் ,உள்­ளூராட்சி சபை போன்றவற்றுக்கு அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­க­ப்ப­ட­வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வாதிகார முறைக்கு இடமில்லை எனக் கருதுகின்ற ஒரு ஜனாதிபதி, ஜனநாயகம் முழுமையாக இந்த நாட்டில் நிலவுவதற்கு அதிகாரம் எந்தளவுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண் டும் என்பதையும் உணர்ந்திருப்பார் என்றும் எதிர்கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த இந்த அரசாங்கம் செயற்பட்டு வரு கின்றது என்று சர்வதேசம் கருதுகின்றது. இதனால் இந்த கருமத்தில் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் வெற்றிபெறுவதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய சுற்றாடல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.   ஜனா­தி­பதியாக மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்ற பின்னர், அவர் சுற்­றா­டலில் அதிக கவனம் செலுத்தி வரு­வ­தாகவும் அவர் அவ­ரது காலப்­ப­கு­தியில் பல்­வேறு விட­யங்­களை செய்வதற்கு முயற்­சி­களை மேற்கொண்டு வரு­வதாகவும் கூறினார்.

நாட்டின் பொரு­ளா­தாரத்தை வளர்த்து நாட்­டி­னு­டைய கலா­சாரம், மக்கள் மத்­தியில் ஒற்­றுமை, ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்கம்,புரிந்­துணர்வு, ஆகியவற்றை ஏற்படுத்தவும் உள்­­நாட்டின் தேசி­யப்­பி­ரச்­ச­னைக்கு ஒரு நிரந்­த­ர­மான தீர்வை காணவும் ஜனா­தி­பதி முற­மையை ஒழிப்பதற்கும் பல்வேறு முயற்­சி­களை அவர் மேற்கொண்டு வரு­வதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த நாட்டின் சர்­வா­தி­கா­ரத்தை இல்­லாமல் செய்­வது ஜன­நா­ய­கத்­திற்கு உரிய இடத்­தைக்­கொ­டுப்­பது போன்ற பல்­வேறு கரு­மங்­களில் அவ­ரது அர­சாங்கம் ஈடு­பட்டு வரு­கின்­றது. ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்­க­வேண்டும் என்று கூறு­கின்­ற­போது தனக்­குள்ள அதி­கா­ரங்­க­ளை தான் விட்டு செல்­லத்­த­யா­ராக இருப்­ப­தா­கவும் அவர் தௌ;ளத் தெளி­வாக கூறு­வதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் பல தலை­வர்­க­ளாக இருந்­த­வர்கள் இவ்­வி­த­மான பல உறுதி மொழி­களை வாக்­கு­று­தி­களை கூறி­யபோதும் அவை பின்னர் நிறை­வேற்­றப்­பட வில்லை என்று தெரிவித்த இரா. சம்பந்தன்   ­ஜ­னா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது ஜனா­தி­பதி அதி­கா­ரத்தை நீக்கி இந்த நாட்டின் ஒரு சர்­வா­தி­கார ஆட்சி இருக்­க­கூ­டாது. ஒரு ஜன­நா­யக முறமை இருக்க வேண்டும் என்ற கார­ணத்­திற்­காக அந்த அதி­கா­ரங்­களை பகிர்ந்து கொடுக்­கவும் முன்­வந்­துள்ள அவ­ருக்கு  பாராட்­டு­தல்­களைத் தெரி­விப்பது தம் கட­மை­யாகும் என்றும் கூறினார்.

அவ்­வி­த­மாக மக்­க­ளி­னு­டைய இறைமைகள் அந்­தந்த மக்­களின் இறை­மையின் அடிப்­ப­டையில் பயன்படுத்த சந்­தர்ப்பம் இருந்­தால்தான் நாட்டில் ஜன­நா­யகம் உண்­மை­யாக நில­வக்­கூ­டிய நிலைமை ஏற்­படும் என்றும் நாட்­டின் ­ஜ­னா­தி­பதி,மற்­றும் ­பி­ர­த­ம­மந்­திரி ஆகிய இரு­வரும் இந்த நாட்டின் பல பிரச்சி­னை­களை தீர்ப்­பதில் மிகவும் நிதா­னத்­துடன் செயற்­பட்டு வரு­கின்­றனர் என்றும் கூறினார்.

ஜனா­தி­பதி தனது பத­விக்­கால ஆட்­சியில் இருந்து நீங்­கு­கின்ற பொழுது இந்த நாடு வேறு ஒரு நாடாக மாற­வேண்டும் என்று தெரிவித்த சம்பந்தன் இன்­றைக்கு இந்த ஆட்சி மாற்­றத்தின் பின்னர் சர்­வ­தே­சத்­ததால் எமது நாடு மதிக்­கப்­ப­டுவதாகவும் ஜனா­தி­பதி நாடு­க­ளுக்­குச்­செல்லும் போது அவரை மதித்து சிறப்­பான வர­வேற்பு அளிக்­கப்­ப­டு­வதில் தாமும் பெரு­மை­ய­டைவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பிறகு கொள்­கை­ய­ளவில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டு.மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்ற கருத்து சர்வதேசத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Spread the love

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • மக்­களின் இறை­மையின் அடிப்­ப­டையில் மாகாணம், பிராந்­தியம் மற்றும் உள்­ளூராட்சி சபைக்கு அதி­காரத்தை பகிர்ந்­த­ளிக்­க, மக்கள் மத்தியில் ஒற்றுமை, நல்­லி­ணக்கம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்த இந்த அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செய்தது என்ன?

Share via
Copy link