மொழியை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எந்தவொரு முரண்பாடும் ஏற்படக்கூடாதென ஜனாதிபதி தெரிவித்தார்.
உலகிலுள்ள பல நாடுகளில் இடம்பெறுவது போன்று முரண்பாடுகளால் எமது நாட்டின் வரலாற்றிலும் முரண்பாடுகளால் பேரவலம் ஏற்பட்டது. மொழியானது மனிதாபிமானத்தின் குரலாக இருக்கவேண்டுமே தவிர மொழி ரீதியில் வகுப்புவாதமோ, வளப்பகிர்வில் அநீதியோ இடம்பெறக் கூடாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (23) முற்பகல் கண்டி தர்மராஜ கல்லூரியில் அகில இலங்கை தமிழ்மொழி தின விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எந்தவொரு மொழியையும் பேசுபவர் தனது மொழியிலேயே நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அந்த உரிமையை மேலும் உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.