170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மக்களின் கருத்துக்கு அமையவே அரசியல் சாசனம் உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவது குறித்து இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அரசியல் சாசனம் தொடர்பில் சில அடிப்படை யோசனைகள் முன்வைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் கருத்துக்களை பெற்றுக்கொள்ள 6 உபகுழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love