இலங்கை பிரதான செய்திகள்

காவல்துறை உத்தரவினை மீறியமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்த முடியாது – சம்பந்தன்

sambanthar
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

காவல்துறை உத்தரவினை மீறிய காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் காவல்துறையினரின் உத்தரவினை மீறி பயணம் செய்தமைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட முடியாது எனவும்  இந்த சம்பவம் தொடர்பில் கிரமமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தாது காவல்துறையினர் சட்டத்தை அமுல்படுத்தியிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.