குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கால்பந்தாட்ட விளையாட்டு மூளையை பாதிக்கக் கூடும் என புதிய ஆய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. கால்பந்தாட்ட விளையாட்டின் போது பந்தை தலையினால் அடிக்கும் யுக்தியொன்று காணப்படுகின்றது. ஹெடிங் என தெரிவிக்கப்படும் பந்தை தலையினால் அடிப்பதனால் நினைவாற்றல் பாதிக்கப்படுவதாகவும் மூளைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கால் பந்தை 20 தடவைகள் தலையில் அடித்ததன் பின்னர், மூளையில் குறிப்பிடத்தக்களவு சிறிய மாற்றம் ஏற்படுவதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் நினைவாற்றல் சுமார் 40 வீதம் முதல் 60 வீதம் வரையில் குறைவடைவதாகவும் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.