Home உலகம்ஈராக்கில் மது விற்பனைக்கு தடை :

ஈராக்கில் மது விற்பனைக்கு தடை :

by admin


ஈராக்கில்  மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மது தயாரிக்கவும், இறக்குமதி செய்யவும் இத்தடை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இந்த அறிவிப்பு அரசாங்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தடையை மீறுபவர்களுக்கு 25 மில்லியன் ஈராக் தினார் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எத்தனை  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆதரவு தெரிவித்தார்கள் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. பொதுவாக ஈராக்கின் பெரிய நகரங்களில் மதுபானக் கடைகள் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஈராக்கில் ஷியா பிரிவை சேர்ந்தவர்களே  அதிக அளவில் உள்ளதுடன் பாராளுமன்றத்திலும் அப்பிரிவை சேர்ந்தவர்களே அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

iraq2

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More