49
இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் 6 பெண் போராளிகள் உட்பட 23 மாவோயிஸ்ட் போராளிகளைக் கொன்று அவரது உடல்களை கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒடிசா – ஆந்திர மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் சுட்டுக் கொல்ல்ப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் இடங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடம்பெற்ற சண்டையின் போது நான்கு ஏ.கே 47 துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Spread the love