162
மலேசியாவில் அரசு மருத்துவமனையில் இன்று திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர் சிலர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மருத்துவமனைக்குள்ளே சிக்கிக் கொண்ட 294 நோயாளிகள் மற்றும் 193 ஊழியர்களையும் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்;. தீ விபத்திற்கான காரணம் குறித்து மலேசிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love