Home இலங்கை கிளிநொச்சியில் திடீரென பொலிஸ் மற்றும் அதிரடிப்படை குவிப்பு

கிளிநொச்சியில் திடீரென பொலிஸ் மற்றும் அதிரடிப்படை குவிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது நிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல்நகர் பகுதியில்  அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால்   அங்கு பதற்ற நிலை உருவாக்கி  காணப்பட்டது.

kili-2

கிளிநொச்சி அறிவியல் நகர்  பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றுவந்த நிலையில், அந்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக  தகவல் ஒன்று பரவியதை அடுத்து  கிளிநொச்சி அறிவியல் நகர்   பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, திடீர் என  பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தமையால்    அங்கு பதற்ற நிலைமை உருவாகிஇருந்தது

எனினும் கிளிநொச்சி மாவட்ட பிரயைகள் குழுவினர் கர்த்தாளுக்கு ஒத்துழைப்பு தருமாறு ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினரை கேட்டதற்கு அமைவாக  குறித்த ஆடைத் தொழிற் சாலைகள் பன்னிரண்டு மணியளவில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

அதேவேளை கிளிநொச்சி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் வீதியில் ரயர்கள் எறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபட்ட சில வாகனங்கள்  மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் கலகம் அடக்கும் வகையில் பொலிஸார் தயார்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

kili-2 kili14717217_1168761086517365_1258649572712280933_n 14731206_1168760986517375_4580108488861741231_n

14681651_1168761043184036_1961797656374832983_n

vlcsnap-2016-10-25-16h43m44s113kili-3

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More