எதிர்வரும் 29ம் திகதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிப்பது குறித்த சில நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.
125 டெசிபலுக்கு மேல் சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்கக் கூடாது, நீதிமன்ற விதிமுறைகளை கடைபிடிக்காமல் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வாங்கக் கூடாது மற்றும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என நிபந்தனைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள மாசுக்கட்டுபாட்டு வாரியம், ஒலி மாசு மற்றும் புகையில்லா தீபாவளியைக் கொண்டாடுவோம் என பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.