152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
தமது உரை திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அண்மையில் தாம் ஆற்றிய உரை ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டதாகவும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூரண சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஊடகங்கள் தம்மீது சேறு பூசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
படைவீரர் தொடர்பான நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரை நாட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இந்த உரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love