Home இலங்கைஇந்திய கடவுச்சீட்டுடன் இலங்கையர் ஒருவர் கைது

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கையர் ஒருவர் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை நோக்கிப் பயணிக்க முயற்சித்த போது மதுரையில் வைத்து குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதான சிறிதயா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டில் பெற்றோர் உயிரிழந்ததன் பின்னர், சிறிதயா கர்னாடகாவில் கடமையாற்றி வரும் சகோதரியுடன் தங்கியிருந்தார்.

மிஹின் லங்கா விமான சேவை விமானத்தின் ஊடாக அவர் இலங்கைக்கு வர முயற்சித்திருந்தார். இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்திய குறித்த நபரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

arrest

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More