குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வாழ் நாள் தடை விதிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் எந்தக் காலத்திலும் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட உள்ளது.
சுற்றுலா வீசா, வர்த்தக வீசா அல்லது அவுஸ்திரேலியர்களை திருமணம் செய்து கொள்ளுதல் உள்ளிட்ட எந்த வழியிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளன. அவுஸ்திரேலியர்களை திருமணம் செய்து கொள்ளுதல் உள்ளிட்ட எந்த வழியிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளன. சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபடுவோருக்கு இந்த சட்டம் கடுமையான செய்தியை சொல்லும் என பிரதமர் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச வாழ்நாள் தடை சட்டம் எதிர்வரும் நாட்களில் அவுஸ்திரேலிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுரு , மனுஸ் தீவுகளுக்கும் மற்றும் பபுவுவா நியூ கினி தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மெய்யாகவே புகலிடம் கோரும் நபர்களாக இருந்தாலும் அவர்கள் வேறு நாடுகளில் குடியேற்றப்படுவார்களே தவிர அவுஸ்திரேலியாவில் தங்க வைக்கப்பட மாட்டார்கள் எனவும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் மிகவும் மோசமான குற்றவாளிகள் எனவும் அவுஸ்ரேலிய பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்