Home இலங்கைபுத்தர்சிலையை நிறுவியவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லவில்லை – தமண காவல் நிலைய பொறுப்பதிகாரி

புத்தர்சிலையை நிறுவியவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லவில்லை – தமண காவல் நிலைய பொறுப்பதிகாரி

by admin


சட்டத்துக்கு முரணான வகையில் இறக்காமம் பிரதேசத்தில் நேற்றைய தினம் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ள நிலையில்  மேற்படி சிலையினை குறித்த இடத்தில் வைப்பதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவொன்றை, சிலையினை நிறுவிய பௌத்த மதகுருமாரிடம், தான் ஒப்படைத்துள்ளதாகவே தான் அங்கு சென்றுள்ளதாக தமண  காவல் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

சிலையினை குறித்த இடத்தில் வைப்பதற்கு முன்னதாகவே, நீதிமன்ற உத்தரவினை தான் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்த அவர் சிலையினை அந்த இடத்தில் நிறுவியவர்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லவில்லை எனவும்  சட்டத்தினை நிலைநாட்டுவதற்காகவே  சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More