குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கோப் அறிக்கை மூடி மறைக்கப்படாது என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட கோப் அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்றில் நிதி அதிகாரத்தை பாதுகாக்கவும் உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
45000 கோடி ரூபா மோசடி குறித்து அந்தக் காலத்தில் கோப் குழுத் தலைவராக கடமையாற்றிய விஜயதாச ராஜபக்ஸ சுட்டிக் காட்டிய போது அவர் பதவியிழக்க நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் கோப் குழுவின் தலைவராக ஆளும் கட்சி அல்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எல்லா நேரங்களிலும் பாராளுமன்றின் ஜனநாயகத்தை வலுப்படுத்திக் கொள்ளவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சி;க்கின்றார் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.