132
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
யாழ்ப்பாணத்தில் ஹாவா குழுவினைச் சேர்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்கள் இருவரையும் யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடகப் பயிற்சிக்காக இந்த வாள்களை எடுத்துச் சென்றதாக குறித்த நபர்கள் கூறிய போதிலும் உண்மையில் அந்த வாள்கள் நாடகத்திற்கு பயன்படுத்தக்கூடியவை அல்ல என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love