Home இலங்கையாழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தேசிய காவல்துறை ஆணைக்குழு அறிக்கை தயார்

யாழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த தேசிய காவல்துறை ஆணைக்குழு அறிக்கை தயார்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய காவல்துறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள விசேட கூட்டமொன்றில் இந்த அறிக்கை தொடர்பில் விரிவாக பேசப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட உள்ளன.தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு நேரில் சென்று, தகவல்களை திரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More