குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
பிரான்ஸின் வர்த்தக ராஜாங்க அமைச்சர் மார்டின் பின்விலி, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்றைய தினம் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் பிரான்ஸின் உயர் மட்ட ராஜதந்திரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல், வர்த்தக மற்றும் வியாபார உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.