இலங்கை

பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணைகள் மூடி மறைக்கப்படக் கூடாது – ஜாதிக ஹெல உறுமய

champika-ranawaka
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த விசாரணைகள் மூடி மறைக்கப்படக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த தனியான ஓர் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என வலியுறுத்தியுள்ள அவர் பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையில் அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் தொடரும் எனவும் சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற போதிலும் துரதிஸ்டவசமாக சிலர் இந்த விடயத்தில் விதிவிலக்காக திகழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 8 other subscribers