குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க வித்தியாசமான ஓர் உலக சாதனை படைத்துள்ளார். இரண்டு சதங்களுக்கு இடையில் அதிக கால இடைவெளி என்ற சாதனையை உபுல் தரங்க படைத்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் பின்னர் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் போது அதிக கால இடைவெளியில் இரண்டு சதங்களைப் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையை தரங்க நிகழ்த்தியுள்ளார்.
2006ம் ஆண்டில் சதம் பெற்றுக்கொண்டிருந்த தரங்க பின்னர் இந்த ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராகவே சதமொன்றை பதிவு செய்துள்ளார். முதலாவது சதத்திற்கும் இரண்டாவது சதத்திற்கும் இடையில் 3888 நாட்கள் இடைவெளி காணப்படுகின்றது.
இதற்கு முன்னதாக இந்த சாதனை சிம்பாப்வே வீரர் ஹமில்டன் மஸகஸ்டாவினால் நிகழ்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.