203
குளோபல் தமிழ் செய்தியாளர்
கிளிநொச்சியில் நீண்ட கோடையின் பின்னர் நேற்று மழை கொட்டித் தீர்த்தது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் பெய்த மழையை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனையடுத்து இதுவரையில் விதைப்பில் ஈடுபடாத விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வரட்சி நிலவியது. மக்கள் குடிநீருக்குப் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டனர். அத்துடன் மேய்ச்சல் தரைகள் வரட்சியில் கருக கால்நடைகளும் உணவின்றி அல்லாடத் தொடங்கின.
விவசாயம், விலங்கு வேளாண்மை இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பிரதேசத்தில் சிறியளவு மழை வீழ்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் விதைப்பில் ஈடுபட்டனர். அப் பயிர்களுக்கு மழையை எதிர்பார்த்து வானம் பாரத்திருந்த விவசாயிகள் மகிழச்சியடைந்தனர். இதேவேளை நேற்றைய தினம் மழையை தொடர்ந்து இரவிரவாக விவசாயிகள் உழுது விதைப்பில் ஈடுபட்டனர்.
எவ்வாறெனினும் மழை வீழ்ச்சி பிந்தியமை காரணமாக வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறும் விவசாயிகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறும் மழையின் அடிப்படையில் விளைச்சல் தங்கியுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
Spread the love