170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஊனமுற்ற முப்படை வீரர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள தகுதியற்ற ஊனமுற்ற முப்படை வீரர்களுக்கு இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
ஓய்வூதியம் வழங்குமாறு ஊனமுற்ற படையினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டமொன்றை நடத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love