குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறா நாடுகளின் வரிசையிலிருந்து இலங்கை பின்னடைந்துள்ளது. முதல் தடவையாக இவ்வாறான ஓர் சாதக மாற்றம் அண்மைய இலங்கையில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டு நாடுகளுக்கு சுட்டெண்கள் வழங்கப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டு காலப் பகுதியில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தீர்க்கப்படாத நான்கு வழக்குகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் இதுவரையில் அவ்வாறான தண்டனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.