Home இலங்கைமனித உரிமை மேம்பாடு குறித்து தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

மனித உரிமை மேம்பாடு குறித்து தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

மனித உரிமை மேம்பாடு தொடர்பில் தெளிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள இலங்கை மனித உரிமை விவகாரங்களை மேம்படுத்த வேண்டுமென இலங்கைக்கு வந்;துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்; தெரிவித்துள்ளனர்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ள அவர்கள் மனித உரிமை மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளனர்.  யுத்த வலயத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு காத்திரமானவும் விரைவானதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசயிமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More