இலங்கை

அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

anura-senanayake
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்பய்பட்டுள்ள முன்னாள் பிரதிக்காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி காவல் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவின் விளக்க மறியல் காலமும் நீடிக்கப்பட்டுள்ளது.இருவரினதும் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 16ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் இந்த விளக்க மறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேவேளை, நாரஹேன்பிட்டி காவல் நிலையத்தில் சம்பவம் இடம்பெற்ற போது காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட டேமியன் பெரேராவின் தொலைபேசி அழைப்பு விபரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply