176
இந்தோனேசியாவில் மோசமான வானிலை காரணமாக படகு ஒன்று கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்ததுடன் 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த படகில் 90 பேர் பயணம் செய்ததாகவும் மழை, ராட்சத அலைகளினால் இன்று புதன்கிழமை காலை பேட்டம் தீவு பகுதியில் படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனையவர்களை மீட்கும் பணியில் ஹெலிகொப்டர்களும், படகுகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love