Home இலங்கை யுத்தகுற்றங்களிற்கான பொறுப்புக்கூறலை மறந்துவிடுங்கள் – எக்கனமிநெக்ஸ்ட்

யுத்தகுற்றங்களிற்கான பொறுப்புக்கூறலை மறந்துவிடுங்கள் – எக்கனமிநெக்ஸ்ட்

by admin


தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

தேசிய அரசாங்கத்திற்குள் காணப்படும் மோதல்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரசியல்சீர்திருத்தங்களை பாதித்துள்ளதுடன், அரசாங்கத்திற்குள் நெருக்கடியை ஏற்படுத்தி பிரதமரை கவிழ்ப்பதற்கான முயற்சிகளை எதிரணியினர் மேற்கொள்வதற்கான துணிச்சலையும் அளித்துள்ளது. ஓக்டோபர் 12 ம் திகதி ஜனாதிபதி வெளியிட்ட கடுமையான கருத்துக்களால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வதற்கான முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த உரையில் ஜனாதிபதி பிரதமரின் ஆட்சியின் கீழ் உள்ள இரு அமைப்புகள் மீது நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஒன்று- இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுமற்றையது குற்றப்புலனாய்வு பிரிவினர்.

ஜனாதிபதி இந்த கருத்துக்கள் மூலம் பிரதமரை இலக்குவைத்தார் என்ற அபிப்பிராயம் காணப்படுகின்றது.பிரதமரே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைமைப்பொறுப்பிற்கு  தில்ருக்சியை  நியமித்தவர். ஜனாதிபதியின் இந்த உரை வெளியான சில மணிநேரங்களில் தான் வெளிநாட்டில் சட்டமொழுங்கிற்கான அமைச்சர் சாகலரத்தினாயக்கவுடன் சொக்லட் சாப்பிடும் படத்தை பிரதமர் வெளியிட்டார்- இதனை ஜனாதிபதிக்கான பதிலடியாகவே பல விமர்சகர்கள் கருதுகின்றனர்.

எனினும் தனக்கான ஆதரவு சிறிதுசிறிதாக குறைவடைந்து செல்வதை பிரதமர் உணரவில்லை.கோப் குழுவின் அறிக்கை கூட்டு எதிரணியினரை மேலும் துணிச்சலடையச்செய்துள்ளது. 2014இல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து சிறிசேனாவை பிரித்து ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு முக்கிய காரணமாக காணப்பட்ட இரகசிய புள்ளியொருவர் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்,அவர் தற்போது ஜனாதிபதியின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அரசாங்கத்தை கொண்டுவர முயல்கின்றார் என்கின்ற அரசியல்வட்டாரங்கள்.

இந்த நபர் ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் இந்தநபர் இறங்கியுள்ளார். விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியகட்சிக்கு பாராளுமன்றத்தில் இன்னமும் பெரும்பான்மை இல்லாதநிலையே காணப்படுகின்றது,அதேவேளை தற்போதைய தேசிய அரசாங்கத்தில் சிறிசேனா ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 34 உள்ளனர்,ஆனால் விக்கிரமசிங்கவிற்கான அவர்களது ஆதரவு சிறிசேனவிற்கான ஆதரவாக மாறலாம்.

அதேபோன்று கட்சி ஓன்றிணையும் பட்சத்தில் அதன் பலம் 94 ஆக காணப்படும், ஆட்சி அமைக்க அதற்கு இன்னமும் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசியம், இந்த 19 உறுப்பினர்களையும் திரட்டுவது கடினமான விடயம் என்றாலும் சாத்தியமானது என மகிந்தராஜபக்ச அணியினர் நம்புகின்றனர்.

சிறிசேனா தனது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பட்சத்தில் அமைச்சர்கள் ராஜித,அர்ஜூன, சம்பிக்கபோன்றவர்களின் ஆதரவும் அவருக்கு கிடைக்கலாம்- அவர்கள் ஐக்கியதேசிய கட்சியின் கீழ்போட்டியிட்டவர்கள்.மேலும் பிரதியமைச்சர் கருபரனவிதாரண, சிறிசேனாவின் விசுவாசியாக கருதப்படுபவர்,இது தவிர அமைச்சர் ராஜிதவின் மகன் மற்றும் ஹிருணிகா போன்றவர்களும் உள்ளனர்.அரசாங்கம் மாறும்பட்சத்தில்  ஐக்கியதேசியகட்சியுடன் உள்ள 10 முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் சிறிசேனாவிற்கு கிடைக்கலாம்,இதன் மூலம் சிறிசேனா தலைமையிலான அரசாங்கத்திற்கு 110 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கலாம்.இது தவிர டக்ளஸ் தேவானந்தா,போன்றவர்களும் உள்ளனர். மேலும் ஐக்கியதேசிய கட்சியின் சில உறுப்பினர்களை வாங்குவது கடினமாகயிராது

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஐக்கியப்படுத்துவதே பெரும் சவால் .ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த பலர் ஊழல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான மகிந்த குடும்பத்தை விரும்பவில்லை.எனினும் மகிந்தராஜபக்சவின் கௌரவமான வெளியேற்றமும்,அவரது மகனை உள்வாங்குவது குறித்த இணக்கப்பாடும் இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் என அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.

ஜனாதிபதியின் ஓக்டோபர் 12 உரை  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களை பலப்படுத்தியுள்ளது. 19 திருத்தம் பிரதமரை நீக்கி இன்னொருவரை அரசாங்கத்தை அமைப்பதற்காக அழைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கவில்லை.இதன் காரணமாகவே அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கு சிறிசேனவிற்கு 113 வாக்குகள் தேவை.

அதேவேளை பிரதமர் நம்பிக்கையுடன் உள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2004 இல் சந்திரிகா தனது அரசாங்கத்தை கலைக்கப்போகின்றார் என்பதை அறியாமலிருந்தவர் ரணில்விக்கிரமசிங்க. இதேவேளை ஜனாதிபதியின் அந்த உரை காரணமாக தாங்கள் அரசியல்சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை தற்போதைக்கு கைவிடவேண்டியிருக்கும் என அரசியல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றை முன்னெடுப்பதற்கு அரசியல் ஸ்திரதன்மை அவசியம்,அவற்றை முயற்சிப்பதற்கான தருணம் இதுவல்ல,அரசியல் அமைப்பில் 19 திருத்தத்திற்கு அப்பால் செல்லமாட்டோம்,யுத்தகுற்றங்களிற்கான பொறுப்புக்கூறலை மறந்துவிடுங்கள் என்கிறன அரசியல்வட்டாரங்கள்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More