160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி
கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆல மரம் சரிந்து விழுந்ததில் பல நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.நேற்று புதன் கிழமை இரவு ஒன்பது முப்பது மணியளவில் மழை பெய்து கொண்டிருந்த வேளை குறித்த மரம் வேரோடு சரிந்து ஏ9 வீதிக்கு குறுக்காக விழ்ந்துள்ளது. இதனால் பல மணி நேரம்போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
பின்னா் கிளிநொச்சி மாவட்ட அனா்த்து முகாமைத்துப் பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்து இராணுவத்தின் உதவியுடன் சரிந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீா்செய்யப்பட்டது. இன்று வரை மரத்தின் அடிப் பகுதி வீதியின் ஒரு பகுதியின் குறுக்காக அகற்றப்படாது காணப்படுகிறதுஎன எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Spread the love