மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கு அமைய உலக வங்கி நிதியொதுக்கீட்டில் தலா 6.5 மில்லியன் ரூபா பெறுமதியில் கேகாலை மாவட்டத்தில் தெரணியாகலை சப்புமல்கந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்படும் சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜின் தலைமையில் இடம்பெற்றதுடன் சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினர் ரஞ்ஜித் பொல்கம்பொல தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவட்ட ஓருங்கிணைப்பாளர்கள் எஸ்.மந்;தி;ரிகுமார், எஸ். சோமசுந்தரம், ஆர். முத்துகுமார், ஆகியோர் கலந்துகொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது